dinamalar telegram
Advertisement

இதே நாளில் அன்று

Share
Tamil News
அக்.,15,1897

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் 1897 அக்., 15ல் பிறந்தவர் வெங்கடராமர். கர்நாடக இசை பயின்றவர் தன் 17வது வயதில் முதல் இசைக் கச்சேரியை, கடலுாரில் அரங்கேற்றினார்.தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். அத்துடன் ஜோசியம், ஆயுர்வேதமும் அறிந்திருந்தார். 1950களில், அகில இந்திய வானொலியில் அவரது கச்சேரி தவறாமல் இடம் பெற்றது.

தமிழகம் மட்டுமின்றி, திருப்பதி, காக்கிநாடா, விசாகப்பட்டினம், மும்பை, டில்லி ஆகிய நகரங்களிலும் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.சென்னை இசைக் கல்லுாரியின் தலைவராக 1956ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி' உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.கடந்த 1975 செப்., 13ல் தன், 77வது வயதில் காற்றில் கலந்தார். கர்நாடக இசைக் கலைஞர், முடிகொண்டான் வெங்கடராமர் பிறந்த தினம் இன்று!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement