dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில்... விவசாயிகள் இருசக்கர பேரணி

Share
அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, பொகலுார், வடக்கலுார், மேட்டுப்பாளையம் தாலுகாவில், பள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஆகிய ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு, இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்க, 40 கிராமங்கள் வழியாக, வாகன பேரணி நேற்று முன்தினம் நடந்தது. அக்கரை செங்கப்பள்ளியில், பேரணி துவங்கியது.கரியனுார், வாக்கனாங்கொம்பு, வையாளிபாளையம், புங்கம்பாளையம், இடுகம்பாளையம் ஆத்திகுட்டை, ஒட்டக மண்டலம், மூக்கனுார், கரியனுார், ஆலாங்குட்டை உட்பட 40 கிராமங்கள் வழியாக மதியம் 3:00 மணிக்கு முடிந்தது.கல்லுாரியில் கலாம் பிறந்த நாள் விழா காரமடை ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினம், மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன், தலைமை வகித்தார்.கல்லுாரி முதல்வர் ரூபா, கலாம் போட்டோவிற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், கலாமின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் திரையிடப்பட்டது.பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில், வணிகவியல் துறை, முதலாண்டு மாணவன் முகிலன், மூன்றாமாண்டு மாணவி கிரேஸ்லின் எடித், இரண்டாமாண்டு மாணவி ஆதினா, மூன்றாம் ஆண்டு தொழில்சார் வணிகவியல் துறை மாணவி ஆதிரா லட்சுமி ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இளைஞர் விழிப்புணர்வு பேரணிதுடியலுார் அருகே, வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், அப்துல் கலாம் பிறந்த நாள், இளைஞர் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.துடியலுார் முக்கிய சந்திப்பில் இருந்து, என்.ஜி.ஜி.ஓ., காலனி வரை நடந்த பேரணியில், மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை, ஏந்திச் சென்றனர்.பேரணியில், கல்லுாரி முதல்வர் உமா, துணை முதல்வர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கார்த்திக், வினோ, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்ற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள், 18 வயது முதல், 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.பெ.நா.பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள், விண்ணப்பத்தை பெ.நா.பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பெற்று, மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து, போலீஸ் ஸ்டேஷனில் அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் சேர்க்கலாம்.வரும் 24ம் தேதி இறுதி நாள். மேலும், விபரங்களுக்கு ஊர் காவல் படை பிளட்டூன் கமாண்டர் ரமேஷ், 88832 92929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சுகாதார நிலையத்தில் சிசேரியன் பிரசவம்
கோவில்பாளையத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, முதன்முறையாக, நேற்று முன்தினம், அக்ரஹார சாமக்குளத்தைச் சேர்ந்த அனிதா 29, என்ற பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை வாயிலாக, பிரசவம் பார்க்கப்பட்டது. இதுகுறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுகப்பிரசவம் மட்டுமே பார்க்கப்படும். இங்கு, ரத்த வங்கி உள்ளிட்ட பிற அவசர வசதிகள் இல்லை.
கர்ப்பிணி அனிதாவுக்கு, இரண்டாவது குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்பு இல்லாததால், 'சிசேரியன்' செய்யப்பட்டது. இதில், 2.8 கிலோ எடையில், ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம். இங்கு, 'சிசேரியன்' நடந்தது இதுவே முதன் முறை' என்றனர்.மகப்பேறு டாக்டர் சுவர்ணாம்பிகை, குழந்தை நல டாக்டர் விஜயலட்சுமணன், மயக்கவியல் நிபுணர் ஹேமானந்த், செவிலியர் ராஜேஸ்வரி ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்றனர்.குடிநீர் கோரி மாநகராட்சியில் மனுமாநகராட்சி, 4வது வார்டு மக்கள், தி.மு.க., வட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில், துடியலுாரில் உள்ள மாநகாட்சி அலுவலகத்தில்கொடுத்த மனு:ஜல்லித்தோட்டம், டி.என்.பி., நகர், பார்க் சிட்டி, அண்ணா நகர், ஜோதி நகர், கலைஞர் நகர், பேரின்ப நகர், சக்தி நகர், சபரி கார்டன், உள்ளிட்ட பகுதிகளில், மாதம் இரு முறை மட்டுமே அத்திக்கடவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஆழ்துளை கிணறுகள் பராமரிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஊராட்சி அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடுசூலுார் ஒன்றியத்துக்குட்பட்டது சின்னியம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி அலுவலகம் பழமையானது என்பதால், சேதமடைந்துள்ளது.புது அலுவலகம் கட்ட, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கட்டுமானப் பணிக்காக, ஊராட்சி அலுவலகம், அரசு பள்ளி வளாகத்துக்கு தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை மானியைப் பராமரிக்க கோரிக்கை
சூலுார்-திருச்சி ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள மழைமானியில், மழை அளவு பதிவாவதில் குளறுபடிகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'இந்த மழைமானி பொருத்தப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மரக்கிளைகளால், மழை மானி மறைக்கப்பட்டுள்ளதால், அதிகளவு மழை பெய்தாலும் குறைந்த அளவே பதிவாகிறது.
உடனடியாக மரக்கிளைகளை அகற்ற வேண்டும். அல்லது தாலுகா அலுவலக வளாகத்துக்கு மழைமானியை மாற்ற வேண்டும்' என்றனர்.விசைத்தறிக்கூடங்களில் வழிபாடுசூலுார், கருமத்தம்பட்டி, சோமனுார் சுற்று வட்டாரத்தில், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்பின்னிங் மில்கள், விசைத்தறி கூடங்கள் ஏராளமாக உள்ளன.இங்கு, நேற்று, ஆயுதபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தொழிற்கூடங்கள்மாவிலை தோரணங்கள், வாழைக்கன்றுகளால்அலங்கரிக்கப்பட்டன. ஆயுத பூஜை வழிபாட்டில்,உரிமையாளர்கள், தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, வழிபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement