dinamalar telegram
Advertisement

முறையாக கை கழுவினால்,80 சதவீத நோய்கள் அண்டாது

Share
கோவில்பாளையம்:உலக கை கழுவும் தின நிகழ்ச்சி, கோவில்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், டாக்டர் பாலாஜி கை கழும் முறை குறித்து, செயல்விளக்கம் காண்பித்தார். வட்டார மருத்துவ அலுவலர் யக்ன பிரபா பேசுகையில், "வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவுடன் மறவாமல் கைகளை, 30 வினாடிகள் கழுவ வேண்டும். வெறும் நீரில் மட்டும் கழுவாமல் சோப்பு கொண்டு கழுவ வேண்டும். விரல் இடுக்கில், நகங்களில், முன்புறம் பின்புறம், என, திருப்பி திருப்பி கழுவ வேண்டும். முறையாக கைகளைக் கழுவினால், 80 சதவீத நோய்கள் நம்மை அண்டாது என, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது" என்றார். சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் பேசுகையில், "கொரோனா அரக்கனை எதிர்க்க, கை கழுவுவது சிறந்த ஆயுதமாகும். அடிக்கடி சோப்பால் கைகளை கழுவிக் கொண்டிருந்தால் கொரோனா தொற்று ஏற்படாது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும் அக்டோபர் 15-ம் தேதி உலக கை கழுவும் தினத்தை அனுசரிக்க அறிவுறுத்தியுள்ளது" என்றார். நிகழ்ச்சியில், பொறுப்பு மருத்துவ அலுவலர் ஸ்ரீதிவ்யா, டாக்டர்கள் ஷியாம், சுஜாதா செவிலியர், கிராமப்புற செவிலியர், மருந்தாளுநர், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement