dinamalar telegram
Advertisement

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

Share
கருமத்தம்பட்டி;திருப்பூர் மாவட்டம், மருதாசலபுரத்தை சேர்ந்தவர் கங்காதரன், 30; கார்மென்ட்ஸ் நிறுவன தொழிலாளி.கடந்த, 27ம் தேதி 12:30 மணிக்கு பைக்கில் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, கருமத்தம்பட்டி அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் அருகே வந்தபோது, திடீரென பைக்கில் இருந்து மயங்கி விழுந்தார்.தலையில் பலத்த காயமடைந்தவர், அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக, கோவை, தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, கடந்த 12ம் தேதி இறந்தார்.கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement