dinamalar telegram
Advertisement

மனைவி சொல்வதை முதல்வர் கேட்பாரா?

Share
Tamil News
மதுரையில் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், பா.ஜ., மாநில பொதுச் செயலர் சீனிவாசன் பேசுகையில், 'ஸ்ரீரங்கத்தில் பா.ஜ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என, போலீசார் கூறினர். காரணம் கேட்ட போது, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, கோவிலுக்கு வருவதாக தெரிவித்தனர்.
'இதை முதலில் தெரிவித்திருந்தால், அவரையே ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்க வைத்திருப்போம்' என தெரிவித்தேன். மக்கள் சொல்வதைத் தான், முதல்வர் ஸ்டாலின் கேட்பதில்லை; அவரின் மனைவி சொல்வதையாவது கேட்கட்டும்' என்றார். அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'மனைவி சொல்லுறதை கேட்டால், உடனே குடும்ப ஆட்சி நடக்குதுன்னு சொல்லுவாங்க... எப்படி போனாலும், 'கேட்' போட்டால் எப்படி பா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement