dinamalar telegram
Advertisement

ஆயுத பூஜையையொட்டி மருதமலையில் தரிசனம்

Share
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆயுதபூஜையொட்டி சுவாமி கும்பிட ஏராளமான பக்தர்கள் நேற்று திரண்டனர்.இக்கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி, உற்சவ மூர்த்திகள் கொலு வைக்கப்பட்டது. கொலுவில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு, நாள்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், ஆயுத பூஜையையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயுத பூஜையை ஒட்டி ஏராளமான, பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.இன்று விஜயதசமியையொட்டி, சுப்பிரமணிய சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பை எய்யும் விழா நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement