dinamalar telegram
Advertisement

ஸ்கூட்டி மீது ஆட்டோ மோதல்; ஒருவர் பலி

Share
கோவை:உக்கடம்-பைபாஸ் ரோடு, சிவராம் நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜேந்திரன், 67. இவர் பெரியகடை வீதியில் ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்தார். இவர் உக்கடம்-சுங்கம் பைபாஸ் ரோட்டில் ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.சிவராம் நகர் சந்திப்பு அருகே, ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ஸ்கூட்டி மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரனை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.பின், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய சூலுார், மதியழகன் நகரை சேர்ந்த சுரேஷ்குமார், 52 என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement