dinamalar telegram
Advertisement

மழைகாலங்களில் மின்விபத்து: விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

Share
கோவை:மழைகாலத்தில், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை தெற்கு மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின்பாபு கூறியதாவது:மழைகாலங்களில் மின்விபத்துகளை தவிர்க்க, இடி, மின்னலின் போது, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மின்பாதைக்கு அருகில் உள்ள மரங்கள், கிளைகளை வெட்டும் போது, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதோடு, அம்மின்பாதையில், மின்சாரம் தடை செய்த பின்னரே வெட்ட வேண்டும்.
மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது. வீட்டின் மின்சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உலர்ந்த ரப்பர் காலனியை அணிந்து, மெயின் சுவிட்சை அணைத்த பின், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மின் கம்பங்களின் இழுவை கம்பியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டவோ, துணிகளை உலர்த்தவோ கூடாது. அறுந்து கிடக்கும் மின் வயர்கள் குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். மின்சாரத்தால் ஏற்படும் தீயை, தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டாம். விழிப்புடன் இருந்தால் விபத்தை தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement