dinamalar telegram
Advertisement

24 மணி நேர தடுப்பூசி திட்டம்: இதுவரை 65 ஆயிரம் டோஸ்

Share
கோவை:கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் 24 மணி நேர தடுப்பூசி மையம் மூலமாக இதுவரை, 65 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில், கடந்த ஆக., 23ம் தேதி, 24 மணி நேர தடுப்பூசி செலுத்தும் சிறப்பு மையம் துவங்கப்பட்டது. இதன் மூலம், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 65 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.''இன்று (நேற்று) 122 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி, முதல் தவணையாக 40 ஆயிரத்து 216 டோஸ்களும், இரண்டாம் தவணையாக 25 ஆயிரத்து 174 டோஸ்களும் சேர்த்து இதுவரை 65 ஆயிரத்து 390 டோஸ் செலுத்தப்பட்டுள்ளது,'' என்றார் டீன் நிர்மலா.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement