dinamalar telegram
Advertisement

சங்கரா கல்லுாரியில் இம்பேக்ட்-2.0

Share
கோவை:சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் சார்பில், 'இம்பேக்ட்-2.0' என்ற தலைப்பில் கருத்தரங்கு இணையவழியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராதிகா தலைமை வகித்தார்.கே.ஜி. கலை அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் கிருஷ்ணபிரியா பங்கேற்று, 'வடிவமைப்பு சிந்தனை மற்றும் விமர்சன சிந்தனை' என்ற தலைப்பில் பேசினார். ஆந்திரா கே.எல்., பல்கலை புத்தாக்க மைய இணை டீன் க்ரோவி ராஜ சேகர் 'தொடக்க மற்றும் ஐ.பி.ஆர்: ஒரு பயணம்' என்ற தலைப்பில் வர்த்தக முத்திரைகள், புவியியல் அடையாளங்கள், பதிப்புரிமை, சந்தைப்படுத்துதலில் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தார்.கல்லுாரி துணை முதல்வர் பெர்னார்டு எட்வர்டு, தகவல் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியர் சுலோச்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement