dinamalar telegram
Advertisement

நோ புட் வேஸ்ட் குழுவுக்கு வண்டி

Share
கோவை:கோவையில் உள்ள திருமண மண்டபங்கள். உணவகங்கள், ஓட்டல்கள், விழாக்களில் சமைத்து கைப்படாமல் இருக்கும் எஞ்சிய, உபரி உணவை சேகரித்து, ஏழை மக்களுக்கும், பசியில் வாடுவோருக்கும் 'நோ புட் வேஸ்ட்' குழுவினர் வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் நடப்பாண்டு 459 சேவை அழைப்புகள் மூலம், 8 லட்சத்து, 83 ஆயிரத்து, 263 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 'உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்' என்கிற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அத்திட்டத்தை கோவையில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில், உபரி உணவு சேமிக்கும் வாகனத்தை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.விழாவில், அமைச்சர் பேசுகையில், ''விழாக்களில் உபரியாகும் உணவை சமூக ஆர்வலர்கள் பெற்றுச் சென்று, பசியாக இருப்போருக்கு வழங்குவர். ஏழை எளியோரிடம் வரவேற்பு பெற்ற திட்டம் இது. கைபடாத உணவு மீதமாக இருப்பின், 90877 90877 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்,'' என்றார்.'சற்றே குறைப்போம்'அடுத்தகட்டமாக, எண்ணெய், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வதால், உடல் நலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, 'சற்றே குறைப்போம்' என்கிற திட்டத்தையும், அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்திருக்கிறார்.இவ்விழாவில், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன் கூறுகையில், ''எண்ணெய், உப்பு, சர்க்கரை பயன்பாட்டை சற்றே குறைப்போம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ''இதன் பயன்பாட்டை குறைக்க, அனைத்து ஓட்டல் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்துகிறோம். 'மாடல்' நகராக கோவை இருக்கும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement