dinamalar telegram
Advertisement

வீட்டு சுவரில் மோதிய கார்: மூதாட்டி காயம்

Share
Tamil News
அவிநாசி:சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த விமலநாதன் என்பவர், தனது காரில் நேற்று மதியம் புளியம்பட்டி- சேவூர் ரோட்டில், சூரிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தார்.கட்டுப்பாடிழந்த கார், ரோட்டோரம் நின்றுக் கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி, எதிரேயுள்ள சக்திவேல் என்பவரது வீட்டுச் சுவற்றில் மோதியது.சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த சக்திவேலின் தாய் ஜோதிமணி, 60 காயமடைந்தார். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement