dinamalar telegram
Advertisement

பக்தர்கள் மட்டற்ற மகிழ்ச்சி!

Share
திருப்பூர்:நேற்று ஆயுதபூஜை. திருப்பூரில் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிறுவனம், வீடுகளில் பலர் சரஸ்வதி பூஜை கொண்டாடினர்.விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள், திருப்பூர் திருப்பதி, குருவாயூரப்பன், கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் வழிபட்டனர். வியாழக்கிழமை என்பதால், வாலிபாளையம் சாய்பாபா கோவிலில் கூட்டம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று முதல் வரும் நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கோவில் திறப்புக்கு, நேற்று மதியம் அரசு அனுமதி அளித்தது. இதனால், பக்தர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக விஜயதசமி நாளில் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கும்.நேற்று மதியத்துக்கு பின் அறிவிப்பு வந்ததால், முன்கூட்டியே ஏற்பாடுகளை பல கோவில் நிர்வாகங்கள் மேற்கொள்ளவில்லை. இருப்பினும், இன்று கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்குமென பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர். நாளை (16 ம் தேதி) புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால், பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிவர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement