dinamalar telegram
Advertisement

மதுக்கடை அகற்றப்படுமா?

Share
பல்லடம்:நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என, கோடங்கிபாளையம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையம் ஊராட்சியை சேர்ந்த மக்கள், கலெக்டர், டாஸ்மாக் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கிய மனு:வார்டு எண் 5ல் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ளது. 'குடி'மகன்கள் நடமாட்டம் காரணமாக, இப்பகுதியில் விபத்துகள் அதிகரித்துள்ளன. மேலும், மதுக்கடையை சுற்றி ஏராளமான குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஊருக்குள் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், மதுக்கடையால் மிகுந்த அச்சப்படுகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே இரண்டு மதுக்கடைகள் அருகருகே உள்ளன . இருந்தும் இங்கு மதுக்கடை அமைந்துள்ளது, கிராம மக்களின் அமைதியை கெடுக்கும் செயலாகும். எனவே, இங்குள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement