dinamalar telegram
Advertisement

ஆதார் எடுக்க அலைமோதும் மக்கள்: தபால் ஆபீசில் சேவை துவங்குமா?

Share
அவிநாசி:'அவிநாசியில், ஆதார் அட்டை சார்ந்த பணிகளை எளிமையாக்க, தபால் நிலையங்களில், ஆதார் சேவை மையங்களை ஏற்படுத்த வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆதார் அட்டை எண் என்பது, மக்களின் முக்கிய ஆவணமாக மாறியுள்ளது. அவிநாசியை பொருத்தவரை, தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள 'ஆதார் இ- சேவை' மையம், பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 'இ- சேவை' மையத்தில் மட்டுமே புதிய ஆதார் அட்டைக்கான விண்ணப்பம் பெறப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது. ஆதார் அட்டையில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.தாலுகா அலுவலக வளாகத்தில் 'ஆதார் இ- சேவை' மையத்தில், அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால், சேவை குறைபாடு உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில், தினமும், 20 பேருக்கு மட்டுமே 'டோக்கன்' அடிப்படையில் ஆதார் சேவை சார்ந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.தினமும், நுாற்றுக்கணக்கான மக்கள், ஆதார் சேவை சார்ந்த பணிகளுக்கு அலைமோதுகின்றனர்.அவிநாசி தபால் நிலையம், சேவூர் உள்ளிட்ட ஆங்காங்கே உள்ள தபால் நிலையங்களில் ஆதார் அட்டை சார்ந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement