dinamalar telegram
Advertisement

ஆயுத பூஜை: 2 லட்சம் பேர் பயணம்

Share
Tamil News
சென்னை : நாடு முழுதும் நேற்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று பல ஊர்களில் விஜயதசமிவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினங்கள் என்பதால், பலர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களுக்காக, கடந்த 12, 13ம் தேதிகளில் தமிழகம் முழுதும் சிறப்பு பஸ்களை, தமிழக போக்குவரத்து கழகங்கள் இயக்கின.

இந்த வகையில், சென்னையில் இருந்து 12, 13, 14 ஆகிய நாட்களில் இரண்டு லட்சம் பேர் பஸ்களில் பயணித்தனர்.நாளை முதல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement