dinamalar telegram
Advertisement

இயந்திரமயமான வாழ்க்கையில் மறந்த உலக்கை உரல்

Share
Tamil News
திருவாடானை:வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் வாழ்க்கை இயந்திர மயமானதால் உலக்கை, உரல் பயன்பாடு குறைந்தது.பண்டைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் உரல், உலக்கை கட்டாயம் இருக்கும். கொழுக்கட்டை, அப்பளம், அதிரசம் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் செய்வதற்கு உரலில் போட்டு இடிப்பார்கள்.

வீட்டு முறையில் செய்யும் பல உணவு பொருட்கள் நல்ல சத்து மிகுந்தும், ருசியாகவும் இருந்தது. தற்போது எல்லாம் இயந்திரமயமாகி விட்டதால் இதுபோன்ற உலக்கைக்கும், உரலுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது.உலக்கையின் பயன்பாடு வெகுவாக குறைந்ததால் வீடுகளில் ருசியாக உண்ணும் பனியாரங்கள் நாளைடைவில் கிடைப்பதற்கு அரிய பொருளாக மாறிவிட்டது.

கிராமங்களில் வயதான பெரியவர்கள் இருக்கும் வரை பழைய உணவு முறை இருந்தது. தற்போது உணவு பழக்கம் மறைந்து போகும் நிலை உருவாகி அம்மியும், ஆட்டுக்கல்லையும் தேடிகண்டுபிடிக்கும் நிலை மாறிவிட்டது.

அதே போல் கோயில்களில் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அந்த நோய் சரியானவுடன் கோயில் சன்னதியில் தரையில் படுக்க வைத்து வயிற்றில் மாவிளக்கு வைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். மாவிளக்கு செய்வதற்காக கோயில்களில் பின்புறம் நிறைய உலக்கைகள், உரல்கள் இருக்கும்.

ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் மிக்ஸியில் அரைக்கப்பட்ட மாவை கொண்டு வந்து வழிபாடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.பழமை வாய்ந்த இந்த பொருட்கள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டதால் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள் தான். உடல் உழைப்பு இல்லாமல் போனதால் முதுகு வலி, கை, கால் உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்திற்கும் மெஷின் வந்துவிட்டதால் பெண்களுக்கு உடல் இயக்கம் இன்றி ஆரோக்கியம் குறைந்துவிட்டது. குனிந்து நிமிர்ந்து செய்த அந்த வேலை முதுகெலும்பை பலப்படுத்தியது. பழமையும், புதுமையும் கலந்தது தான் வாழ்க்கை. யாருக்கு எது தேவை என்பதை அவரவர் தான் தீர்மானிக்கவேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  உரல், உலக்கையை மட்டுமா மறந்தோம்? கேழ்வர கு, கம்பு இவற்றை கையினால் அறைக்கும் எந்திரம், அம்மி -குழவி. மண் சட்டி, பானை இவற்றையும் மறந்தோம்.செக்கு /எண்ணெய், வயல் உழவு, சாண உரம் எல்லாம் போயோ போய்விட்டது. புற்றுநோய் அவற்றிற்குப் பதிலாக உள்ளே நுழைந்து விட்டது.

 • Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்

  Don't worry boys our beloved Mr.56 will take us back to "Back to the Past" like in the movie series "Back to the Future '. He is playing the Doc character .

 • அப்புசாமி -

  வீட்டுக்கு வீடு பைப்புல குடிநீர் வரப்போகுது. இனிமே கிணறுகளை இழுத்து மூடிறலாம். பெண்களுக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச வேலையும் போய், வேற உபயோகமான வேலைகளை செய்யலாம்னு மோடி ஐயா ஆசைப்படுதாரு.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  மோடிஜி மறக்கல்லை.. நாம உரல்.. அவனுங்க உலக்கை.. பெட்ரோல் விலை, கேஸ் விலை, ஜிஎஸ்டி வரி அதிகரிப்புன்னு உளி, உலக்கை, சம்மட்டி, சுத்தியல் ன்னு பல விதத்திலே மண்டையை பொளக்குறாரு..

Advertisement