dinamalar telegram
Advertisement

பட்டாசு கடை உரிமம் 22 வரை அவகாசம்

Share
திருப்பூர்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கிவருகிறது. மாநகர போலீஸ் எல்லையில், போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்குகிறார்.தற்காலிக பட்டாசு கடை நடந்த உரிமம் கேட்டு விண்ணப்பிக்க, செப்., 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. கடை உரிமையாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் கால அவகாசம், வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கள ஆய்வு நடத்தி, வரும் 27ம் தேதி வரை, தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டாசு கடை உரிமம் பெற, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement