dinamalar telegram
Advertisement

தொழிலாளி கொலை: திருடர்கள் வெறிச்செயல்

Share
பல்லடம்:பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 42; கூலி தொழிலாளி. பொள்ளாச்சி ரோடு பிரிவில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மர குடோன் அருகே, தினசரி இரவு துாங்குவது வழக்கம். கடந்த 3ம் தேதி தூங்கும்போது, திருடர்கள் இருவர் மரக்கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த, 1,500 ரூபாயை திருடினர். சுப்பிரமணியும், மரக்கடையில் தங்கியிருந்த வாட்ச்மேன் குமாரசாமி என்பவரும் திருடர்களை பிடிக்க முயன்றனர். இதில், சுப்பிரமணியை திருடர்கள் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement