dinamalar telegram
Advertisement

பசுமை என்ற நல்லாயுதம்... கொண்டாடுவோம், தினமும்!

Share
திருப்பூர்:திருப்பூரில், கடந்த 2015ம் ஆண்டு முதல் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வெற்றி அமைப்புடன், பல்வேறு பசுமை அமைப்புகள், தன்னார்வலர்கள் இணைந்து, பொது மற்றும் தனியார் நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது.ஆறு கட்டமாக, இதுவரை 10.5 லட்சம் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளது. 'வனத்துக்குள் திருப்பூர் திட்டம் - 7'ல், நடப்பு ஆண்டு, 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதுவரை, 1.28 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.இந்த பசுமை பணியில், மரக்கன்றுகள் கொண்டுசெல்வது, நடவு செய்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில், டிராக்டர், சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஆண்டிபாளையத்தில் உள்ள கிளாசிக் அவென்யூவில் நேற்று, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில், தண்ணீர் ஊற்றி துாய்மை செய்யப்பட்டது; சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து, மலர் மாலை அணிவித்து, பூஜை செய்விக்கப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் பங்கேற்றனர்.'வனத்துக்குள் திருப்பூர், தொடர்ந்து பசுமைப்பரப்பை விரித்துக்கொண்டே இருக்கும். பசுமைக் கொண்டாட்டம் தினமும் சுற்றுச்சூழலின் வளத்தை உயர்த்தும்' என்றனர் திட்டக்குழுவினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement