dinamalar telegram
Advertisement

பீகார் வாலிபருக்கு கத்திக்குத்து: சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

Share
திருப்பூர்:திருப்பூரில் பீகார் வாலிபரிடம் வழிப்பறி செய்ய முயற்சி செய்து கத்தியால் குத்திய, இரண்டு சிறுவர்கள் உட்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர் சுமத் தாக்கூர், 35. கடந்த ஓன்றரை மாதமாக, திருமுருகன்பூண்டியில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் சம்பளப்பணத்தை பெற்று கொண்டு ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.
பின், சென்னை சென்று பீகார் செல்ல முடிவு செய்த சுமத் தாக்கூர், திருப்பூர், மங்கலம் ரோடு, ஆலாங்காடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்.அங்கு சென்ற, நான்கு பேர் சுமத் தாக்கூரை திடீரென வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
ஆத்திரமடைந்த, அவர்கள் சுமத் தாக்கூரை கத்தியால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.சென்ட்ரல் போலீசார் விசாரணை நடத்தினர். வழிப்பறி செய்ய முயற்சி செய்து கத்தியால் குத்திய சம்பவத்தில், கருவம்பாளையம், ஆலாங்காட்டை சேர்ந்த விஸ்வநாதன், 26, முகமது ஆரிஸ், 24 மற்றும், இரண்டு சிறுவர்கள் என, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement