dinamalar telegram
Advertisement

216 போலீசார் இட மாற்றம் கமிஷனர் அதிரடி

Share
திருப்பூர்:திருப்பூர் மாநகர ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி வந்த, 216 போலீசாரை இடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.திருப்பூர் மாநகர போலீசில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர், போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம் பிரிவு ஆகிய ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீசாரின் விபரங்கள் அடங்கிய பட்டியல் போலீஸ் கமிஷனர் வனிதா அறிவுறுத்தலின் பேரில் தயார் செய்யப்பட்டது.
கடந்த மாதம், இரண்டு கட்டமாக, மாநகர ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளை கடந்து பணியாற்றும் போலீசார் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து இடமாறுதல் தொடர்பாக விருப்ப மனு பெறப்பட்டது.பணி மூப்பு அடிப்படையில், ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டு, எஸ்.எஸ்.ஐ., முதல் போலீசார் வரை, 216 போலீசாரை மாநகர போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டுள்ளார்.இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசார், உடனடியாக சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement