dinamalar telegram
Advertisement

தொற்று பாதிப்பு தணிகிறது 

Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு, 94 ஆயிரத்தை எட்டியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.கடந்த மாத இறுதியில், 92 ஆயிரமாக இருந்த பாதிப்பு, இரட்டை இலக்கங்களில் மெல்ல உயர்ந்து, நேற்று முன்தினம், 94 ஆயிரத்து வந்துள்ளது. 91 ஆயிரமாக இருந்த 'டிஸ்சார்ஜ்', 92 ஆயிரமாகியுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு, 80க்கு கீழ் குறைந்து பதிவாகி வருகிறது. அன்றாட 'டிஸ்சார்ஜ்' , 70 முதல், 80 என்ற நிலையில் உள்ளது.இம்மாத துவக்கத்தில், 873 பேர் சிகிச்சையில் இருந்தனர்; நான்கு நாட்களாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 810 ஆக குறைந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில், 963 பேர் தொற்று பாதித்து இறந்துள்ளனர்.தடுப்பூசியின் பயனாய்...தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்துவதன் விளைவாக, கொரோனா இறப்பு குறைந்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறவர் வயது மூப்பு, இணை நோய் இருந்தால் மூச்சுத்திணறல் பிற தொந்தரவுகள் ஏற்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால், மீண்டு வர கூடிய அளவுக்கு உடல் ஒத்துழைக்கிறது.கடந்த ஜூலையில், 71 ஆக இருந்த கொரோனா இறப்பு, ஆக., 105 ஆக உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. தொடர் தடுப்பூசி முகாம்களின் பயனாய் செப்., மாதம், இறப்பு, 24 ஆக குறைந்தது. நடப்பு மாதம் எட்டு நாட்கள் இறப்பு இல்லை. மீதமுள்ள ஐந்து நாட்களில், எட்டு பேர் இறந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement