dinamalar telegram
Advertisement

பயணிகள் வந்தால்தானே... பணிமனை திரும்பிய சிறப்பு பஸ்கள்

Share
திருப்பூர்:ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்கப்பட்ட போதும், எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால், பயணிகளுக்காக பஸ்கள் காத்திருந்தன. கூவி கூவி பயணிகளை நடத்துனர்கள் அழைத்தனர்.ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்கள், திருச்சி, சேலம் மார்க்கமாக, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தேவைப்பட்டால் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பஸ் இயக்கத்துக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.கடந்த, 13ம் தேதி இரவு முதல் பஸ் இயக்கம் துவங்கியது; ஆனால் கூட்டம் இல்லை. நேற்றும் பஸ்களில் எதிர்பார்த்த கூட்டமில்லை. சேலம், திருவண்ணாமலை செல்லும் பஸ்களில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாத நிலையில், நடத்துனர்கள் கூவி கூவி அழைத்து பஸ்களில் பயணிகளை ஏற்றினர்; சிறப்பு பஸ்கள் வெறுமனே நிறுத்தப்பட்டிருந்தது.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறப்பு பஸ்களில், 50 சதவீத பயணிகள் கூட்டமாவது வருமென எதிர்பார்த்தோம். ஆனால், 20 சதவீத பயணிகள் மட்டுமே வந்திருந்தனர். வழக்கமாக பஸ்களில் பயணிகள் குறைவு என்பதால், சிறப்பு பஸ் இயக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்து பின், பணிமனைக்கு திருப்பி அனுப்பி விட்டோம்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement