dinamalar telegram
Advertisement

உழவர் சந்தைகளில் குவிந்த அதிக வாடிக்கையாளர்கள்

Share
திருப்பூர்;ஆயுத பூஜை நாளில் வீட்டுக்கு தேவையான பழம், காய்கறிகளை வாங்க உழவர் சந்தைக்கு அதிக வாடிக்கையாளர் வந்தனர். சந்தையில் விற்பனை களைகட்டியது.நேற்று முன்தினம் வடக்கு உழவர் சந்தைக்கு, 4.11 டன் பழங்கள் விற்பனைக்கு வந்தது; நேற்று இது, 6.06 டன்னாக உயர்ந்தது. தெற்கு சந்தைக்கு, 3.05 டன் பழம் நேற்று முன்தினம் வந்தது; நேற்று, 3.78 டன் வந்தது. வடக்கில் இரு தினங்களாக வாடிக்கையாளர் எண்ணிக்கை, 2,700 ஆக இருந்தது; நேற்று, 3,210 பேர் சந்தைக்கு வந்திருந்தனர்.தெற்கில் வழக்கமாக விவசாயிகள், வியாபாரிகள், மளிகை கடை நடத்துபவர் சேர்த்து, 4,900 பேர் வருவர்; நேற்று, 5,150 பேர் வந்திருந்தனர். காய்கறி, பழங்கள் என மொத்தம், 75 டன் வந்தது; 19.92 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. வடக்கு சந்தைக்கு, 25 டன் காய்கறி, பழம் வந்தது; எட்டு லட்சத்து, 45 ஆயிரத்து, 365 ரூபாய்க்கு விற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement