dinamalar telegram
Advertisement

அரசு கல்லுாரியில் படிக்க மாணவியர் ஆர்வம்!

Share
அவிநாசி;அவிநாசி அரசு கல்லுாரியில், மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அவிநாசி அரசு கலைக்கல்லுாரி, கடந்த நான்காண்டுக்கு முன் துவங்கப்பட்டது. பி.ஏ., ஆங்கிலம், பி.ஏ., பொருளாதாரம். பி.காம்., மற்றும் பி.காம்., சர்வதேச வணிகவியல் என. நான்கு பாடப்பிரிவுகளில், கடந்தாண்டு வரை, வகுப்புக்கு, 60 மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர்.
ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இம்முறை, அரசு வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு வகுப்பிலும், 75 மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர, ஆய்வக வசதி அடிப்படையில், கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவுக்கு, 50 பேர். பி.எஸ்.சி.. வேதியியல் பாடப்பிரிவில், 24 பேர் அனுமதிக்கப்பட்டனர்.இந்தாண்டு முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில், மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மொத்தமுள்ள, 371 பேரில், 240 பேர் மாணவியர்.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியரே, இங்கு அதிகளவில் படிக்கின்றனர். பெரும்பாலும், பள்ளி படிப்போடு, தங்கள் கல்வியை முடித்துக் கொள்ளும் மாணவியர், பட்டப்படிப்பு படிக்க ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது. உரிய ஊக்குவிப்பு வழங்கி, கல்வியை தொடர்வதற்கும், படிப்பு முடித்ததும், வேலை வாய்ப்பு பெறுவதற்குரிய ஆலோசனையை வழங்கி வருகிறோம்' என்றனர்.
கேம்பஸ் இன்டர்வியூதிறன் வளர்க்க வாய்ப்புஇக்கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர் பெரும்பாலும், சுற்றியுள்ள பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆயத்த ஆடை சார்ந்த தொழிலில் வேலை வாய்ப்பு பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா காலகட்டத்தில், வீடுகளில் இருந்த போது, மாணவ, மாணவியர் பலர் இத்தகைய வேலையில் தங்களை ஈடுபடுத்தி, தங்கள் குடும்ப பொருளாதாரத்தை தாங்கிப்பிடித்தனர்.
தொழில் நகரங்களாக உள்ள திருப்பூர் மற்றும் அருகேயுள்ள ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில், வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கும் சூழலில், தனியார் கல்லுாரிகளில் 'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தி, மாணவ, மாணவியரை பணிக்கு தேர்வு செய்வது போன்று, தொழில் துறையினரும், அரசு கல்லுாரி மாணவ, மாணவியருக்கு. அவர்களது தகுதி அடிப்படையில், வேலை வாய்ப்பு வழங்கும் வகையிலான 'கேம்பஸ் இன்டர்வியூ' போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தினால், மாணவ, மாணவியான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இதன் மூலம், மாணவ, மாணவியர், தங்களின் கற்கும் திறனை அதிகரித்து, திறமையை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement