dinamalar telegram
Advertisement

புகார் பெட்டி; தடைக்கு தேவை விடை

Share
கே.செட்டிபாளையம், வெங்கடேஸ்வரா நகரில் அடுத்தடுத்து போடப்பட்டுள்ள வேகத்தடையை அகற்ற வேண்டும். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.- சண்முகம், கே. செட்டிபாளையம்.
விரிவுபடுத்துவதே விருப்பம்
பெரிச்சிபாளையம் பிரிவில் ரோடு மிக குறுகலாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ரோட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.- விஜயலட்சுமி, பெரிச்சிபாளையம்.
மையத்தில் மின் கம்பங்கள்
தாராபுரம் ரோடு, சந்திராபுரத்தில் இருந்து செரங்காடு செல்லும் ரோடு பல மாதங்களுக்கு பின் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரு மின்கம்பங்கள் ரோட்டின் மையத்திலேயே உள்ளது.- ரத்தினசாமி, திருப்பூர்.
இருள்மயம்... பயமயம்
அவிநாசி - கோவை ரோட்டில் சீனிவாசபுரம் பகுதியில் தெருவிளக்கு சரிவர எரியாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.- செந்தில், அவிநாசி.
தாறுமாறு... தடுமாறு
அவிநாசி புது பஸ்ஸ்டாண்ட் அருகில் ரோட்டோரம் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்.-விவேக், அவிநாசி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement