dinamalar telegram
Advertisement

போனஸ் எதிர்பார்ப்பில் பின்னலாடை தொழிலாளர்கள்!

Share
திருப்பூர்:தீபாவளி நெருங்கும் நிலையில், திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு, கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் விரைந்து வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
திருப்பூரில் உள்ள ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை தயாரிப்பு மற்றும் பல்வேறுவகை ஜாப்ஒர்க் நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் எட்டு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். போனஸ் தொகை கிடைப்பதால், பின்னலாடை தொழிலாளர்களின் பண்டிகை கொண்டாட்டத்தில், தீபாவளி முக்கியமானதாக உள்ளது. பின்னலாடை நிறுவனங்கள், ஆண்டுதோறும் தொழிலாளருக்கு போனஸ் வழங்கி வருகின்றன.ஆடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றை போனஸ் தொகையை பெற்று தொழிலாளர்கள் வாங்கி மகிழ்கின்றனர்கொரோனாவுக்கு பின், திருப்பூர் நிறுவனங்களுக்கு, வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது.
உற்பத்தி பணிகள் வேகம் பெற்றுள்ளன.வரும் நவ., 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. போனஸ் குறித்த எதிர்பார்ப்புகள், தொழிலாளர் மனதில் மேலோங்கியுள்ளது. தொழிற்சங்கங்களும், போனஸ் குறித்த கோரிக்கை கடிதத்தை, ஆடை உற்பத்தியாளர் சங்கத்தினருக்கு அனுப்பிவருகின்றன.சி.ஐ.டி.யு., பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், 'சைமா', ஏற்றுமதியாளர் சங்கம், நிட்மா, டீமா, டெக்மா, சிம்கா சங்கங்களுக்கு, போனஸ் வழங்குவது குறித்து கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், ''தொற்று பாதிப்பை, அரசு தவறான முறையில் கையாண்டதால், திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர் கடும் பாதிப்பை சந்தித்துவருகின்றனர்.பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலைவாசி உயர்ந்துள்ளது. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல், தொழிலாளர்கள் தவிக்கின்றனர். தொழிலாளர்கள், பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும்வகையில், கடந்த ஆண்டைவிட கூடுதல் போனஸ் வழங்கவேண்டும்.பீஸ் ரேட், கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும், பணி நாட்களை கணக்கிட்டு போனஸ் வழங்கவேண்டும். கொண்டாட்டத்துக்கு தயாராக ஏதுவாக, தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களுக்கு முன் வழங்கவேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement