dinamalar telegram
Advertisement

சிந்தையில் சீர்பெற்று உருவாகிறது படைப்பு

Share
Tamil News
பல்லடம்,:இறைவன் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. ஆனால், அதை வெளிப்படுத்துவதில்தான் வேறுபாடு ஏற்படுகிறது. சிலர் இயல்பாகவே தங்கள் திறமைகளை வெளிக்காட்டுவர். ஊக்கப்படுத்துவதன் மூலம் சிலரின் திறமைகள் வெளிப்படும். இயல்பாகவே தனது கையில் வைத்துள்ள கலை நயத்தை, அனைவரும் காணும் வகையில் வெளிப்படுத்தி வருகிறார் கல்லூரி மாணவி ஒருவர்.பல்லடம் அடுத்த, கே.என்.புரம் லட்சுமி மில்ஸ் பகுதியை சேர்ந்த முத்தையா- - ராஜலட்சுமி தம்பதியர் மகள் ஜெய துர்கா. எம்.ஏ., பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்கிறார். கலைநயத்துடன் காண்போர் வியக்கும் வகையில், ஓவியம், பொம்மை தயாரித்தல் உள்ளிட்டவற்றை வீட்டிலேயே செய்து வருகிறார்.ஜெயதுர்காவின் பெற்றோர் கூறுகையில், 'சிறுவயது முதல் ஜெயதுர்காவுக்கு ஓவியம் வரையும் ஆர்வம் அதிகம். நாங்களும் அதை ஊக்கப்படுத்தியதன் காரணமாக, ஓவியம் வரையும் திறன் மேலும் மெருகேறியது. அதன் தொடர்ச்சியாக, காகிதங்களில் இருந்து, சுவர் ஓவியங்கள்வரைவதில் ஆர்வம் காட்டினார். புதிதாக கட்டிய பலரின் வீடுகளில் சுவர் ஓவியங்கள் வரைந்துள்ளார். இதுதவிர, துணி, நூல், மற்றும் உலர்ந்த களிமண் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஏராளமான பொம்மைகள் செய்துள்ளார்.முதல் ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு வீட்டில் கொலு வைத்துள்ளோம். இதற்கான கொலு பொம்மைகள், கடவுள் உருவ சிலைகளை, கடந்த இரண்டு மாதங்களில் செய்துள்ளார். இதை கண்டு அருகிலுள்ள பலரும் தற்போது பொம்மை ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர் என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement