dinamalar telegram
Advertisement

பேரிடர் மீட்பு பணி ஒத்திகை

Share
திருப்பூர்:சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி, சிறப்பு கருவிகள், கலெக்டர் அலுவலகத்தில், கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில், தீயணைப்பு வீரர்கள், தாலுகா அலுவலகம் தோறும் சென்று, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்றுமுன்தினம் மாலை, கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் வினீத் முன்னிலையில், ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.'ரோப் ரைடர்' மூலம் மீட்பு பணியை மேற்கொள்வது; ' பெட்ரோல் செயின் ஷா' மூலம் மரங்களை வெட்டி அகற்றுவது, 'அயன் கட்டர்' மூலம், இரும்பு தளவாடங்களை வெட்டி, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பது; 'ஏர்லிப்ட் பேக்' ஊர்தி வாயிலாக துாக்கி காப்பாற்றுவது.காஸ் மற்றும் எண்ணெய் தீ விபத்துகளை தடுப்பது; சிறப்பு நாசில்கள் மூலம் தீயணைப்பு ஊர்தியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது போன்ற மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.வடகிழக்கு பருவமழை காலத்தில், வெள்ள அபாயம், மண் சரிவின் போது, மக்களை காப்பாற்றுவது குறித்தும், பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள், மாவட்ட அலுவலர் காங்கேய பூபதி, உதவி மாவட்ட அலுவலர் ஜெயசங்கர், திருப்பூர் வடக்கு நிலைய அலுவலர் பாஸ்கரன், திருப்பூர் தெற்கு சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement