மாநிலம், தலைநகர் பெயர்களை மழையாக பொழிந்தாள்
பல்லடம்:கொடுவாயை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி, 59 நொடிகளில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களைக் கூறி சாதனை படைத்தார்.'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற குறளுக்கு ஒப்ப குழந்தைகள் இருக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவர். ஆனால், வாழ்க்கையில் அனைவரும் சாதனை படிப்பதில்லை. பெற்றோரின் வளர்ப்பு, தனித்திறன் உள்ளிட்டவற்றால், சில குழந்தைகள் சாதிக்கின்றன.
கொடுவாய் தொட்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் -- மனோன்மணி தம்பதி மகள் நிலா கனி; இரண்டரை வயதாகிறது; இவர், 59 நொடிகளில், இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களை கூறி கலாம் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.தாய் மனோன்மணி கூறுகையில், 'சிறுவயது முதல் அறிவு சார்ந்த பல பொது விஷயங்களை நிலாகனிக்கு சொல்லி கொடுத்து வருகிறோம். அதை எளிதில் புரிந்து கொண்டு மீண்டும் சொல்வாள். அவ்வாறு, 59 நொடியில் இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை கூறினார்.
இதற்காக ஒன்றரை மாதம் பயிற்சி எடுத்தாள். தொடர்ந்து, கலாம் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வைக்க, லைவ் வீடியோ எடுக்கப்பட்டது. கடந்த மாதம் சாதனைக்கான சான்று, விருது உள்ளிட்டவை வீடு தேடி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், தற்போது உலக நாடுகளின் தலைநகரங்களை கற்பித்து வருகிறோம்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!