dinamalar telegram
Advertisement

கண்காணிக்க கவலை இல்லை

Share
அவிநாசியில், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கோபுரம் (வாட்ச் டவர்) அமைக்கப்பட்டுள்ளது.ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கூட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையும் வருவதையொட்டி, மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். தொடர் விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள், பஸ் ஸ்டாண்டில், அதிகளவில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
கூட்ட நெரிசலை சாதகமாக்கி, சிலர் வழிப்பறி, திருட்டில் ஈடுபட வாய்ப்புண்டு. அதே நேரம்,போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும். இதை கண்காணிக்கவும், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தவிர்க்கவும், போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் கண்காணிப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
வாலிபர் மீது குண்டாஸ்வேலம்பாளையம் அடுத்த அமர்ஜோதி கார்டன் அருகில் கடந்த ஆக., 12ம் தேதி ரோட்டில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில், சாமுண்டிபுரத்தை சேர்ந்த மகாராஜா, 19 என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது, போன் பறிப்பு, கொலை முயற்சி வழக்கு உள்ளது.
பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததால், மகாராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார். அவரை கைது செய்தனர். இதுவரை, 46 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.3 பார்களுக்கு 'சீல்'அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் பார்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூரில் அங்கேரிபாளையம் ரோடு, ஆண்டிபாளையம், மண்ணரை ஆகிய இடங்களில், அனுமதியின்றி பார்கள் இயங்குவது தெரியவந்தது. 'டாஸ்மாக்' மேலாளர் தாஜூதீன், மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் ஆகியோர் ஆய்வு நடத்தி, மூன்று பார்களுக்கும் 'சீல்' வைத்தனர்.வாலிபர் மீது 'போக்சோ'வெள்ளகோவிலை சேர்ந்தவர் வேல்முருகன், 19; திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக, 17 வயது சிறுமியிடம் பழகி வந்தார். அவரிடம் ஆசை வார்த்தை கூறி, சமீபத்தில் திருமணம் செய்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், தனியே வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இதுகுறித்து 'சைல்டு லைன்' அலுவலகத்துக்கு தகவல் தெரிந்தது. அவர்கள் காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, வேல்முருகனை 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.தண்டவாளத்துக்கு பூஜைதிருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட்டில், ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு, சுமை பணி தொழிலாளர்களுக்கு பொரி, சுண்டல், கரும்பு வழங்கப்பட்டது. சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகள் அணிவகுத்து வரிசையாக நிறுத்தப்பட்டு வாழைமரம், கரும்பு கட்டி, மாலை அணிவிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் சைக்கிள், டூவீலர்களை சுத்தம் செய்து, பூஜைக்கு எடுத்து வந்தனர். திருநீறு, சந்தானம், குங்குமம் வைத்து பூ வைத்தனர்.சரக்கு ரயில்கள் வந்தால், அவற்றில் இருந்து சரக்குகளை இறக்கி, லாரியில் ஏற்றினால் மட்டுமே சுமைபணி தொழிலாளருக்கு வேலை, சம்பளம் என்பதால், ரயில் தண்டவாளத்துக்கு மாலை அணிவித்து, பொட்டு வைத்து, படையலிட்டு அனைவரும் வணங்கினர். பூஜையில் பங்கேற்றவருக்கு பொரி, சுண்டல், கரும்பு வழங்கப்பட்டது.
கோவிலில் வழிபாடு
ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயுத பூஜையை முன்னிட்டு, மக்கள், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். வீடுகளில், நவராத்திரி கொலு வைத்திருந்தவர்கள், சிறப்பு வழிபாடு செய்தனர். அவிநாசி நகரை சுற்றியுள்ள பனியன் நிறுவனங்களில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.அவிநாசியில், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கோபுரம் (வாட்ச் டவர்) அமைக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கூட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக, தீபவாளி பண்டிகையும் வருவதையொட்டி, மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். தொடர் விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள், பஸ் ஸ்டாண்டில், அதிகளவில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.கூட்ட நெரிசலை சாதகமாக்கி, சிலர் வழிப்பறி, திருட்டில் ஈடுபட வாய்ப்புண்டு.
அதே நேரம்,போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும். இதை கண்காணிக்கவும், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தவிர்க்கவும், போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் கண்காணிப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement