dinamalar telegram
Advertisement

கார், ஆட்டோ ஊர்வலம்

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூரில், ஆயுத பூஜையையொட்டி ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில், ஆட்டோ மற்றும் கார்களின் திருவீதி உலா நடந்தது.ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில், ஆயுத பூஜை கொண்டாட்டம் திருப்பூர் காமராஜர் ரோடு பெருமாள் கோவில் அருகே நேற்று நடந்தது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர்கள் கிஷோர் குமார், செந்தில்குமார் பங்கேற்றனர். சாமி படங்கள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

ஆட்டோ மற்றும் கார்களின் திருவீதி உலாவை காடேஸ்வரா சுப்ரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். வாகனங்கள் ஊர்வலமாக ஏ.பி.டி., ரோட்டை சென்றடைந்தது. ஆட்டோ ஸ்டாண்டில், ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சார்பில், கொடியேற்று விழா நடந்தது.மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கொடியேற்றி வைத்து, பெயர் பலகை திறந்து வைத்தார்.

அதேபோல், வெள்ளியங்காடு, சந்திராபுரம் பிரிவு, கோவில் வழி பஸ் ஸ்டாண்ட், வீரபாண்டி பிரிவு உட்பட மாநகரில், 65க்கும் மேற்பட்ட ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆயுத பூஜையை கொண்டாடினர்.வழக்கு பதிவு செய்ய திட்டம்வாகனங்கள் ஊர்வலத்துக்கு போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், போலீசார் மறுத்து விட்டனர்.

தற்போது, போலீசாரின் தடையை மீறி ஊர்வலம் சென்றுள்ளதால், தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்ய உள்ளனர்.வழக்கு பதிவு செய்ய திட்டம்வாகனங்கள் ஊர்வலத்துக்கு போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், போலீசார் மறுத்து விட்டனர். தற்போது, போலீசாரின் தடையை மீறி ஊர்வலம் சென்றுள்ளதால், தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்ய உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement