dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடி பெயரை மட்டும் வைத்து ஓட்டு வாங்க முடியாது

Share
Tamil News
சண்டிகர்:''ஹரியானா சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியின் பெயரை மட்டும் வைத்து ஓட்டு வாங்க முடியாது. கடுமையாக உழைக்க வேண்டும்,'' என, மத்திய திட்டம் மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2024ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் பா.ஜ., பொதுக் கூட்டத்தில், மத்திய திட்டம் மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் பேசியதாவது:பிரதமர் மோடியால் 2014 தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தோம். இதையடுத்து பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினோம்.

ஹரியானாவில் முதன் முறையாக பா.ஜ., ஆட்சி அமைந்தது. மீண்டும் நடந்த தேர்தலில் ஏற்கனவே பெற்றதை விட ஏழு இடங்கள் குறைவாக கிடைத்த போதிலும் ஆட்சி அமைத்தோம். மூன்றாவது முறையாக நடக்க உள்ள தேர்தலில் வெறும் மோடிஜி பெயரை மட்டும் வைத்து ஓட்டுகளை அள்ள முடியாது. பா.ஜ., தொண்டர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். அப்போது தான், மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 45 இடங்களையாவது கைப்பற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

ஹரியானாவில் சமீபத்தில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய தடியடியால் அரசுக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது. இதையொட்டி பா.ஜ., தொண்டர்கள் மெத்தனமாக இல்லாமல் வெற்றிக்கு கடுமையாக உழைக்கும்படி ராவ் இந்திரஜித் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

  இலங்கை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்று பிச்சை எடுக்கும் நாட்டில் இருக்கவேண்டியர்கள் தான் மோடியை எதிர்ப்பார்கள். உண்மையான இந்தியனுக்கு தெரியும் இந்தியா எவ்வளுவு வலிமையாக உள்ளது என்று

 • Pandiyan - Chennai,இந்தியா

  இந்திய வறுமை ஒழிப்பில் உலக நாடுகள் பட்டியலில் நூற்றி ஒண்ணாவது இடத்தை பிடித்துள்ளது ..டீசல் நூறை தண்டியாச்சு ..பெட்ரோல் நூறை தண்டியாச்சு ..காஸ் விலை ஆயிரத்தை நெருங்குகிறது ..அதிவிரைவாக செஞ்சுரியை நெருங்கிய மோடிஜிக்கு வாழ்த்துக்கள் ..இந்த சாதனையை சொன்னாலே பிஜேபிக்கு ஓட்டு விழும் ...

 • அப்புசாமி -

  ஒரு மினி புல்வாமா வாவது நடந்தா, அதை வெச்சு சமாளிச்சுடலாம். இல்லேன்னா, 90 க்கு 30 தேறுவதே கடினம்.

 • PRAKASH.P - chennai,இந்தியா

  அவரு போட்டோ போதும்

 • Amal Anandan - chennai,இந்தியா

  குஜராத் மாடல் என்று ஊதி பெரிதாக்கினது ஒன்றுமில்லைனு தெரிஞ்சு ரொம்ப நாளாச்சு.

  • சுள்ளான் - பாலக்கோடு,இந்தியா

   குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டை விக்கறவங்க, திருமங்கலம் ஃபார்முலான்னு ஒண்ணை விஞ்ஞானரீதியா ஊழல் செய்யக் கண்டுபுடிச்சி மக்களையும் அதுல பங்குதாரராகச் சேர்ந்த புண்ணியவான்கள் இருக்கும் மாநிலத்தில் இருந்துகிட்டு நாம எல்லாம் குஜராத் மாடல் பத்தி பேசறது தப்பு.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   திராவிட மாடல் என்றால் ஈர வெங்காயம் போல இல்லாத ஒரு தெற்காசிய சாக்ரடீஸ் விருதை வைத்து ஏமாற்றுவது என்று எடுத்துக்கொள்ளலாமா?

Advertisement