dinamalar telegram
Advertisement

பெட்ரோல் விலை ஏற்றம் ; 23 லட்சம் கோடிக்கு செலவு கணக்கு கேட்க ராகுல் வலியுறுத்தல்

Share
புதுடில்லி: பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏற்றத்தைத் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளில் வசூலிக்கபட்ட 23 லட்சம் கோடி வரிக்கு மக்கள் மோடி அரசை செலவு கணக்கு கேட்க வேண்டும் என காங்., எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.



மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை அதிகரித்து வருவதை அடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனத்தை முன்வைத்து உள்ளார். மக்கள் செலுத்தும் வரியை மத்திய அரசு வீணடிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் முப்பத்தி ஐந்து பைசா அதிகரித்ததை அடுத்து இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


மேலும் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ராகுல், கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விதிக்கப்பட்ட வரி மூலமாக மத்திய அரசுக்கு இருபத்தி மூன்று லட்சம் கோடி வரி கிடைத்துள்ளதாகவும் இந்த பணத்தை மோடி அரசு எதற்காகப் பயன்படுத்தியது என்று மக்கள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மும்பை மாநகரில் 110.75 ரூபாய்க்கு விற்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது மும்பைவாசிகளின் அதிருப்தியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (29)

  • Suppan - Mumbai,இந்தியா

    பட்ஜெட் எதற்கு உள்ளது ராகுல் அய்யா? அதில்தான் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படும். மன்மோகன் /பசி ஐயா உங்களிடம் சொல்லவில்லையா? ஒரு வேலை உங்களுக்கு அந்த சமாச்சாரமெல்லாம் புரியாது என்று நினைத்தார்களோ என்னவோ?

  • duruvasar - indraprastham,இந்தியா

    காட்பாடியருக்கு சொந்தந்தங்கள் அதிகமோ ? உருவரத்தை பத்தி பேசறாங்க ?

  • Anand - chennai,இந்தியா

    இந்த ............. இன்னமும் நாட்டை விட்டு துரத்தாமல் இருப்பது இந்தியர்களுக்கு பெருத்த அவமானம்.......

  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

    The taxes are more and adding to petrol and Diesel cost of Rs.35.50 to final cost of 103.00 as of today.

  • vbs manian - hyderabad,இந்தியா

    போபோர்ஸில் ஆரம்பித்து நிலக்கரி வெஸ்ட்லாண்ட் ஹெலிகொப்டர் கமென்வெல்த் ஊழல் மும்பை அடுக்கு மாடி ஊழல் சீனா ரகசிய ஒப்பந்தம் எல்லாவற்றுக்கும் காங்கிரஸ் முதலில் பதில் சொல்ல வேண்டும்

Advertisement