dinamalar telegram
Advertisement

மக்கள் பணி இன்னும் வேகமெடுக்கும்: கமல்

Share
Tamil News
சென்னை:'மக்கள் நீதி மய்யத்தின் பணி இன்னும் வேகமாக தொடரும்' என்று அக்கட்சியின் தலைவர் கமல் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட கமலின் மக்கள் நீதி மய்யம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் இறங்கியது. கட்சியின் பலத்தை கிராமப்புறங்களில் அறியவே, இந்த முயற்சி என்று கூறப்பட்டது. அது ஒரு வகையில் நல்ல முயற்சி என கட்சியினர் கூறுகின்றனர்.

நிர்வாகிகள் கூறுகையில், 'சொல்லப்போனால் வெல்ல முடியவில்லை என்பதை காட்டிலும், கிராமங்களில் மக்கள் நீதி மய்யம் வளர்ச்சி கண்டுள்ளதை காண முடிந்தது' என்றனர்.கமல் தன் டுவிட்டர் பதிவில், 'உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி, தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை பாராட்டுகிறேன். ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி. எங்களின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்' என்று தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • srinivasan - stockholm,சுவீடன்

    Torch -l battery podungs

  • sankaseshan - mumbai,இந்தியா

    இப்போது இருக்கிற வேகமே போறும் வேகம் கூடினால் தடுமாறி விழுந்துடு வாய்

  • Akash - Herndon,யூ.எஸ்.ஏ

    No battery in his torch ...

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சீமான், டிடிவி.தினகரன், வேல்முருகன் போன்ற பஃபூன்கள் இல்லாவிட்டால் தமிழக தேர்தல் தெருக்கூத்து களைகட்டாது. வைகோ, திருமாவளவன், ஜவாஹருல்லா, உண்டியல்ஸ் போன்ற பபூன்கள் இப்போது சோறு போடும் முதலாளிக்கு சேவகம் செய்ய சென்றுவிட்டபடியால் காமெடிக்கு மேற்படியானுங்கதான்.

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    கட்சிக்கு நிதி வழங்கும் கடைசி தொண்டன் இருக்கும் வரை மக்கள் பணி தொடரும். கடைசிவரை கல்லா கட்டுவோம்.

Advertisement