dinamalar telegram
Advertisement

எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு எனக்கு கிடையாது

Share
Tamil News
சென்னை:'எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று, இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை எனக்கு கிடையாது' என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:ஊரக உள்ளாட்சி தேர்தலில் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில், 138 இடங்களில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுஉள்ளனர். இதன் வாயிலாக ஒன்பது மாவட்ட ஊராட்சி தலைவர் பொறுப்பையும், தி.மு.க., அணியே பெறுகின்ற வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.

அதுபோலவே, 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும், 1,000 இடங்களுக்கும் கூடுதலாக தி.மு.க., அணி வெற்றி பெற்றுஉள்ளது. இதன் வாயிலாக 74 ஊராட்சி ஒன்றிய தலைவர் பொறுப்புகளில், 73 பொறுப்புகள் தி.மு.க., வசமாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற பகுதிகளிலும், தி.மு.க., வெற்றியை குவித்துள்ளது.எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று, ஒரு போதும் இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை, உங்களில் ஒருவனான எனக்கு கிடையாது.

மக்கள் தான் நமக்கு எஜமானர்கள்; நாம் அவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை, எப்பொழுதும் நெஞ்சில் கொண்டு செயலாற்ற வாழ்த்துகிறேன்.விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் களத்திலும், உதயசூரியன் உதித்திட வேண்டும்.

மக்கள் நம் பக்கம்; நாம் மக்களின் பக்கம். அதற்கேற்ப நம் செயல்பாடுகள், மக்கள் நலன் காக்கும் வகையில் தொடர்ந்திடும். இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (19 + 36)

  • ராஜா -

    அண்ணாமலை திமுகவின் கண்ணில் விழுந்த தூசி...புரயோடாமல் விட மாட்டார். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.

  • vbs manian - hyderabad,இந்தியா

    தமிழக மக்கள் சர்வாதிகார ஆட்சிக்கு மலர் தூவி வரவேற்றுள்ளார். போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் எல்லோரும் குறிப்பாக பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுகோள்வது நலம். வெளியில் போகும் பொது நாலு பேரோடு சேர்ந்து செல்லவும்.. கையோடு நல்ல வழக்கறிஞரின் தொடர்பு என்னை வைத்திருக்கவும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். .

  • raguram - madurai,இந்தியா

    இறுமாப்பு வராமல் இருக்கதான் நாங்கள் போட்ட பிச்சை தேர்தல் வெற்றி என மதம் மாற்றும் கும்பல்கார ஜார்ஜ் பொன்னையா இறுமாப்போடு அப்போதே சொல்லியாயிற்றே. இன்றுவரை மாற்றும் கும்பலுக்கு பயந்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லையே

  • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

    இந்த பெருந்தன்மை தான் தலைவரே உங்கள் சிறப்பு மக்கள் தங்களை மதிக்க காரணமான இந்த நற்பண்பு தங்களை மென்மேலும் உயர்வுக்கு கொண்டு செல்லும், வாழ்க பல்லாண்டு

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எனக்கு எதிரிகளே இல்லை என்றவர் ஜெ. அவரை நிரந்தர முதல்வர் என்றவர்கள் அவருடைய அடிவருடிகள். அவர்களுக்கு குட்டு வைக்கவே முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார்.

Advertisement