dinamalar telegram
Advertisement

உ.பி., சட்டமன்ற தேர்தல்: காங்.,கை கழற்றி விடும் சமஜ்வாதி

Share
அடுத்தாண்டு 2022-ல் பஞ்சாப், மனிப்பூர், கோவா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேசம் மாநில தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் எதிர்கட்சிகளான காங்கிரஸ், சமஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கின்றன.


உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமென வலியுறுத்தி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், விஜய் ரத யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

அகிலேஷ் யாதவ் கூறியதாவது: கடந்த காலங்களில் சமஜ்வாதி கட்சி பெரிய தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் அவ்வளவு திருப்தியாக இல்லை. எனவே சிறிய மற்றும் மாநிலக் கட்சிகளை ஒன்றுதிரட்டி கூட்டணி ஏற்படுத்தவே முயற்சிப்பதாக தெரிவித்தார்.இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியுடன் சமஜ்வாதி கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றே உறுதியாக தெரியவருகிறது.


2017 தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி வைத்தன. ஆனால் இந்த கூட்டணியால் பாஜகவுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. மாறாக 312 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது. அப்போது சமாஜ்வாதி கட்சிக்கு 47 சீட்களும், பகுஜன் சமாஜுக்கு 19 சீட்களும், காங்கிரஸுக்கு 7 சீட்கள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • ராஜா -

    மண்டை மேல் கொட்டு வச்சி உக்கார வச்சிருவார் நம்ம யோகி.

  • duruvasar - indraprastham,இந்தியா

    இனிமே வயசுக்கு வந்தா என்ன, வரேலானா என்ன ? ஸ்டாலின் அய்யாவுக்கு நல்ல வாய் ராசி. ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாரு.

  • Karur Kumar -

    PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

  • கு.ரா.பிரேம் குமார் -

    பெரிய கட்சிகளோடு உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில் கூட்டு இல்லை என அகிலேஷ் கூறியது, காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்து சொன்னதாக அர்த்தமல்ல. காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் தற்போதைய நிலையில் (பஞ்சாப் உள்பட) மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் சிறிய கட்சிகளுக்கு நிகரான இடத்தில் தான் இருக்கிறது என்பதே உண்மையான நிலை.

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    இந்த முறையும் அது தான் நடக்கும் ....

Advertisement