dinamalar telegram
Advertisement

பாக்.,குக்கு அமித் ஷா எச்சரிக்கை

Share
Tamil News
புதுடில்லி:''எல்லையில் தாக்குதல் நடத்தினால் உடனே பேச்சு நடத்தியது ஒரு காலம். ஆனால் தற்போது, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதல் போன்ற பதிலடியைக் கொடுப்போம்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நம் அண்டை நாடான பாக்.,குக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஊரியில் 2016ல் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்தாண்டு செப்., 29ம் தேதி பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த நம் விமானப் படை, சர்ஜிக்கல் ஸ்டிரைக்- எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் பாக்., பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கோவாவில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

முன்பெல்லாம் எல்லையில் ஏதாவது தாக்குதல் நடந்தால், உடனே அது குறித்து பேச்சு நடத்தப்படும். ஆனால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று பதிலடியைக் கொடுப்போம் என்பதை நாம் உணர்த்தியுள்ளோம். நம் எல்லையில் பிரச்னை ஏற்படுத்த முயற்சித்தால், அதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சராக இருந்த கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கர் இந்த முக்கியமான, உறுதியான நடவடிக்கையை எடுத்தனர்.

பயங்கரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்றுத் தந்துள்ளோம். எல்லையில் மீண்டும் ஏதாவது தாக்குதல் நடந்தால், மேலும் பல சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவதற்கு தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

என்.எஸ்.ஜி., பாதுகாப்புமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த வாரம் இறுதியில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளை நாலாபுறமும் கடல் சூழ்ந்திருப்பதால், அங்கு பாதுகாப்பு சவால்கள் அதிகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதை கருத்தில் வைத்து அங்கு செல்லும் அமித் ஷாவுக்கு, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்புப் படையின் முழு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும் என்.எஸ்.ஜி., பாதுகாப்பு, அமித் ஷாவுக்கு முதன்முறையாக வழங்கப்பட உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (7 + 4)

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அமித் ஷா வெறும் பாகிஸ்தானுக்குத்தான் சவால் விட்டுக்கிட்டிருக்காரு. ஊருல எல்லாம் தீப்பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கறது அவரு கண்ணுங்களுக்குத் தெரியல.

 • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

  இதைத்தான் நாங்க அமித் கிட்ட எதிர்பார்த்தோம். இன்னுமொரு சர்ஜிக்கல் அட்டாக் கொடுங்கள் ஆட்சி மீண்டும் உங்களுக்கே. இதை யாரும் செய்யமுடியாது பிஜேபி தவிரே.

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  சர்ஜ்ஜிகல் ஸ்ரைக் போன்ற இராணுவ நடவடிக்கை எடுக்க, அதை நடத்துவோம் என கூற, இதை பாராட்ட ஒரு ஆண்மை உள்ளவர்களால் மட்டுமே முடியும். பாரத் மாதா கீ ஜெய்.

 • veeramani - karaikudi,இந்தியா

  எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு, அவர்களது பாணியிலேயே சுர்ஜிக்கல் ஸ்ட்ரிக் மட்டுமல்லாமல், அனைவரையும் ஈவுஇரக்கமில்லாமல் தீர்த்துக்கட்ட வேண்டும். இந்திய எல்லைக்குள் காலடி என்பது , திஹார் சிறை என பக்கத்து நாட்டர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  அமித் ஷா இதை பேசுனது கோவாவில் இதை அப்படியே காஷ்மீர் சென்று பேச துணிவிருக்கா ?

  • கொக்கி குமாரு - West Island,கோகாஸ் கில்லிங் இஸ்.

   மர்மமா கேள்வி கேட்குறீங்க, நீங்க மர்ம மதமா?

Advertisement