dinamalar telegram
Advertisement

உலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களில் இந்தியா முதலிடம்!

Share
புது டில்லி: உலகளவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கையில் 10.07 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2.74 கோடி பயனர்களுடன் அமெரிக்கா இரண்டாமிடத்திலும், 1.74 கோடி பயனர்களுடன் ரஷ்யா மூன்றாமிடத்திலும் உள்ளது.


2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை ரிசர்வ் வங்கி தடை செய்தது. பின்னர் அத்தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தாண்டு பிப்ரவரியில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்யும் வகையில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா 2021-ஐ மத்திய அரசு உருவாக்கியது. இந்த மசோதா இன்னும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் புரோக்கர்சூஸ் எனும் நிறுவனம் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 10.07 கோடி பயனர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கிரிப்டோ உரிமை விகிதத்தின் அடிப்படையில் இந்தியா 5-ம் இடத்தில் உள்ளது. கிரிப்டோ உரிமை விகிதம் என்பது, ஒரு நாட்டின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் கிரிப்டோகரன்சி வைத்திருக்கிறார்கள் என்பதாகும். இந்தியர்கள் 10 கோடி பேருக்கும் மேல் கிரிப்டோகரன்சி வைத்திருந்தாலும், இந்திய மக்கள்தொகையில் அந்த எண்ணிக்கை 7.30% என்பதால் ஐந்தாம் இடத்தில் உள்ளோம்.

ஆர்வத்தில் இளைஞர்கள்!



கிரிப்டோகரன்சி பற்றி தேடுபவர்களில் அமெரிக்கர்கள் முன்னிலையில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து இந்தியா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் உள்ளன. பெருநகரங்கள் மற்றும் இரண்டு, மூன்றாம் கட்ட நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த கிரிப்டோகரன்சிகளில் அதிகம் முதலீடு செய்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • சீனி - Bangalore,இந்தியா

    ஈமுகோழி முதலிடு திட்டங்களில் மாட்டுவதில் நம்மவர் முதலிடத்தில் இருப்பார்கள்.... ஹாஹாஹா.....

  • MANIAN K - Dubai ,இந்தியா

    உச்ச நீதிமன்றம் பிட் காயின் ஆதரவு தெரிவித்ததால் இது நடக்கிறது

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    அதே மாதிரி அதிக க்ரிப்டோ கிருத்துவர்கள் உள்ள நாடும் இந்தியா தான் .....

  • Sudalai priyan,chennai -

    crypto is basically for hedging against the inflation..

  • SUBBU - MADURAI,இந்தியா

    அப்புசாமி நீ என்ன ....பு? என்ன ஜென்மம் என்றே தெரியலயை?ஆ ஊன்னா மொத ஆளா கருத்துங்கிற பேர்ல விஷத்தை கக்குற?ஏன் ஒனக்கு இந்தியாவில் இருக்க பிடிக்கலைன்னா பேசாம ஆப்கானுக்கோ,பாகிஸ்தானுக்கோ ஓடிப் போய்ட்றலாம்ல?இந்தியாவில் ஏன் கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்க?

Advertisement