dinamalar telegram
Advertisement

புது மாப்பிள்ளை விபரீத முடிவு

Share
பள்ளிபாளையம்: ஆலாம்பாளையம் பகுதியில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் குமாரப்பன்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 29; ஈரோடு அருகே பெருந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்தார். அவருக்கும், நீலகிரி குன்னூரைச் சேர்ந்த, 23 வயது பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பெற்றோர், மனைவியுடன் பேசி கொண்டிருந்தார். தூங்கச் செல்வதாக கூறிவிட்டு, தன் அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement