dinamalar telegram
Advertisement

ஓடையின் குறுக்கே பாலம்: கட்டுமான பணி தீவிரம்

Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே சவுதாபுரம் செல்லும் வழியில் உள்ள ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பள்ளிபாளையம் அருகே வெப்படை அடுத்த சவுதாபுரம் பகுதிக்கு செல்லும் வழியில் ஓடை செல்கிறது. இதன் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக மாணவ, மாணவியர் மற்றும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகிறன்றனர். சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தால் இந்த ஓடையில் செல்லும். அப்போது தரைப்பாலத்தின் மேல்பகுதியில் தண்ணீர் செல்லும். இதில் செல்ல முடியாது. இதனால் சுற்றுவட்டார மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இங்கு பாலம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த ஓடையின் குறுக்கே இரண்டு கோடி ரூபாயில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement