dinamalar telegram
Advertisement

ராணுவக் கல்லூரியில் சேர தகுதித்தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

Share
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட அறிக்கை: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில், 2022 ஜூலையில் துவங்கும் வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு, டிச., 18ல் தகுதித்தேர்வு நடக்கிறது. ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, அங்கீககரிக்கப்பட்ட பள்ளியில், 7ம் வகுப்பு தேறிய அல்லது, 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும், 2009, ஜூலை, 2க்கும், 2011, ஜன., 1க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த (அதாவது, 2022 ஜூலை1 அன்று 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும்). ஆண் சிறுவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்விற்கான விண்ணப்பபடிவம், விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை, கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். கட்டணம் எஸ்.பி.ஐ., டேராடூன், உத்தரகண்ட் மாநிலத்தில் மாற்றத்தக்க வகையில், செக்காகவோ, 'rimc.gov.in' என்ற இணையதளம் மூலமாவோ செலுத்தி, 'தி கமாண்டண்ட், ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ், டேராடூன் கண்டோன்மென்ட், டேராடூன் 248 003, உத்தரகண்ட் மாநிலம்', என்ற முகவரியில், விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் 600 ரூபாய், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு, 555 ரூபாய். ஜாதிச்சான்றுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பபடிவம், பிற விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு 'கன்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேஷன்ஸ், டி.என்.பி.எஸ்.சி., சென்னை 600 003' என்ற முகவரிக்கு, வரும், 31, மாலை, 5:45 மணிக்குள் சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். விபரங்களுக்கு, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை, நேரிலோ அல்லது 04286 233079 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement