dinamalar telegram
Advertisement

கோவில் உண்டியல் திறப்பு: ரூ.30.94 லட்சம் காணிக்கை

Share
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக, 30.94 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தனர். நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் பக்தர்களை வைத்து எண்ணப்பட்டது. இக்கோவில்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் பக்தர்களால் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ஆஞ்சநேயர் கோவிலில், 28 லட்சத்து, 92 ஆயிரத்து 819 ரூபாய் ரொக்கம் கிடைத்தது. தங்கம், வெள்ளி காணிக்கை இல்லை. நரசிம்மர் கோவிலில், இரண்டு லட்சத்து 1, 647 ரூபாய் ரொக்கமும், 15 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement