dinamalar telegram
Advertisement

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல்: வரும் 20ல் வாகனங்கள் ஏலம்

Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 69 வாகனங்கள் வரும், 20ல் ஏலம் விடப்படுகிறது. போலீஸ் எஸ்.பி., சரோஜ்குமார் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 13 நான்கு சக்கர வாகனங்கள், 56 இரண்டு சக்கர வாகனங்கள், என மொத்தம், 69 வாகனங்கள் வரும், 20 காலை, 10:00 மணிக்கு, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. அந்த வாகனங்களை ஆயுதப்படை மைதானத்தில் வரும், 18 காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் 20 காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் முன் பணமாக, 5,000 ரூபாய் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்தவேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement