dinamalar telegram
Advertisement

விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி

Share
மல்லசமுத்திரம்: பாலமேடு கிராமத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. மல்லசமுத்திரம் அருகே பாலமேடு கிராமத்தில், 'ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மக்காச்சோளம்' என்ற தலைப்பில் வேளாண் உதவி இயக்குனர் தனம் தலைமையில் பண்ணைப் பள்ளி பயிற்சி நடந்தது. சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெகதாம்பாள் கலந்துகொண்டு, கே.வி.கே., செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் மற்றும் படைப்புழு வாழ்க்கைமுறை தாக்குதல், அறிகுறிகள், ஒருங்கிணைந்த முறையில் பூச்சி நோய் கட்டுப்பாடு, இனக்கவர்ச்சிப் பொறி பயன்படுத்துதல், விதை நேர்த்தி செய்து விதைத்தல், குறைந்த அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு குறித்து உதவிப்பேராசிரியர் சுகன்யா கண்ணா கூறினார். துணை வேளாண் அலுவலர் ராமசாமி, உதவி வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement