dinamalar telegram
Advertisement

புரட்டாசி மாத பட்டம்: நெல் நாற்று நடவு தீவிரம்

Share
எருமப்பட்டி: எருமப்பட்டியில் புரட்டாசி மாத பட்டமாக நெல் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. எருமப்பட்டி, பவித்திரம், செல்லிபாளையம் உள்ளிட்ட கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வந்தது. இதையடுத்து விவசாயிகள் முதல் போக ஆவணி மாதப் பட்டமாக கடந்த மாதம், 100ஹெக்டேரில் நெல் நடவு செய்தனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த, 15 நாட்களாக மழை பெய்வதால் விவசாய கிணறுகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் சோளம்,மரவள்ளி, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் பயிரிட்ட விவசாய நிலங்களில் தற்போது புரட்டாசி மாத பட்டமாக நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நி?லையில், தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு போதிய நாற்று நெல் வழங்கப்படவில்லை என்றும், தனியார் நிறுவனங்களில் சென்று வாங்கி வந்து நாற்று நடவு செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement