dinamalar telegram
Advertisement

குட்டை நிலத்தை மீட்டு தரக்கோரி மனு

Share
நாமக்கல்: கடந்த, 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள குட்டை நிலத்தை மீட்டு தரக்கோரி, கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம், காளிச்செட்டிப்பட்டிபுதூர் மக்கள் மனு அளித்தனர். மனு விபரம்: சேந்தமங்கலம் அருகே, காளிச்செட்டிப்பட்டிபுதூரைச் சேர்ந்த எங்கள் பகுதி அருகே, 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள, 27.64 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவக்காரன்குட்டையை மீட்க வேண்டும். குட்டையை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பால் இந்த நிலங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. விவசாயிகள் பயன்பாட்டுக்காகவும், அரசு நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement