dinamalar telegram
Advertisement

தொடர்ந்து 4 நாள் விடுமுறை: வாகனங்கள் படையெடுப்பால் நெரிசல்

Share
நாமக்கல்: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஏராளமான வாகனங்கள் நாமக்கல் நகருக்குள் படையெடுத்தது.
தமிழகத்தில், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று முதல் நான்கு விடுமுறை வருகிறது. அதன் காரணமாக பணிகளை முடித்துக் கொண்டு, தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக, அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் புறப்பட்டனர். நாமக்கல் நகரில், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வழக்கமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில், தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், ஏராளமான வாகனங்கள் நகருக்குள் படையெடுத்தன. மேலும், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீட்டுக்கு பொருட்கள் வாங்குவதற்கும், ஏராளமான பொதுமக்கள் நகருக்குள் வந்தனர். அதன் காரணமாக, மணிக்கூண்டு, கடைவீதி, கோட்டைச்சாலை, சேலம்-திருச்செங்கோடு சாலை சந்திப்பு ஆகிய முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன. போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். அதேபோல், பஸ் ஸ்டாண்டிலும், வெளியூர் செல்வதற்காக ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வந்ததும் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறுவதையும் காணமுடிந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement