dinamalar telegram
Advertisement

மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாறுதல் கலந்தாய்வு

Share
நாமக்கல்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களை போல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. அதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது சொந்த ஊர் உள்ள மாவட்டங்களுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள, 110 மாவட்ட கல்வி அலுவலர்கள், முன்னுரிமை அடிப்படையில், இடங்களை தேர்வு செய்து, இடமாறுதல் பெற்றனர். நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அவற்றில், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பாலசுப்ரமணியம், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலராக ரவி ஆகியோர் பணியாற்றினர். இடமாறுதல் கவுன்சிலிங்கில், பாலசுப்ரமணியம், சங்ககிரிக்கும், ரவி, தர்மபுரி மாவட்டம், அரூருக்கும் இடமாறுதல் பெற்றனர். அதேபோல், நாமக்கல்லுக்கு, பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் ராமனும், திருச்செங்கோடுக்கு, இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயாவும், இடமாறுதல் பெற்றுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement